புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (23:14 IST)

விஜய் சேதுபதி இல்லாமல் நான் படம் எடுக்க நினைத்தேன் - பிரபல இயக்குநர்

சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி விஜய் சேதுபதி இல்லாமல் நான் படம் எடுக்க நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

சூதுகவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் நலன் குமாரசாமி. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,  அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து, இதுவும் கடந்துபோகும் என்ற படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது. 

தற்போது கௌதம் வாசுதேவ்,. நலன்குமாரசாமி உள்ளிட்ட 4 பேர் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி வகைப் படத்தை இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து நலன் குமாரசாமி கூறியுள்ளதாவது :

இது காதல் கதை என்றும் இப்படத்தை இயக்கும்படி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தை விஜய் சேதுபதி இல்லாமல் இயக்க நினைத்தேன். ஆனால் அவருக்கு இக்கதை பிடித்ததால் இதில் நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.