’அவர் ’எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! - நடிகர் விவேக்

vivek
sinojkiyan| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (14:12 IST)
’தமிழ் சினிமாவின் சிகரம்’ என்று அழைக்கப்படும் மறைந்த இயக்குநர்  பாலசந்தரின்  அறிமுகத்தில் வெள்ளித்திரையில் தோன்றி இன்று உச்சத்தில் உள்ள நடிகர், நடிகையர் ஏராளம். அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் காவியம் என அனைவராலும் கொண்டாப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விவேக், பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் அவரது பேனாவை பெற்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அதில், அவர் கூறியுள்ளதாவது ;
 
யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :