திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (12:00 IST)

சீரியலாவே இருக்கட்டுமே.. அதுமட்டும் ஈஸியா? – வாரிசு ட்ரோல்களால் கடுப்பான வம்சி!

Vamsi
சமீபத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் குறித்து பலரும் ட்ரோல் செய்து வருவது குறித்து இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் ‘வாரிசு’. ராஷ்மிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படம் என்பதால் பலரும் இதை சீரியல் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசிய இயக்குனர் வம்சி “படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? படக்குழு எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பது தெரியுமா? பலரும் அவர்களது கடின உழைப்பை போடுகின்றனர் என்பது தெரியுமா? இது எல்லாமே பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காகதான்.


படத்தை சீரியல் மாதிரி இருக்கிறது என்கிறார்கள். ஏன் சீரியல் எடுப்பதை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அதுவும் கிரியேட்டிவான பணிதான். படத்தை ஆராயுங்கள். ஆனால் வேலையை மட்டம் தட்ட வேண்டாம். வாரிசு சிறந்த கமர்ஷியல் படம்” என பேசியுள்ளார்.

ஆனால் வம்சியின் இந்த பேச்சால் கடுப்பான நெட்டிசன்கள் பலர், ’பணம் கொடுத்து படம் பார்க்கும் பார்வையாளர் படம் பிடிக்கவில்லை என்றால் சொல்லத்தான் செய்வார்கள்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K