வருமானத்தை கொரொனா தடுப்பு பணிக்கு அளிக்கிறேன் - விஷால் பட இயக்குநர்
ஆன்லைன் நடிப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் வரும் தொகை முழுவதையும் கொரொனா தடுப்புப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக இயக்குநர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார்.
இவர் இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரொனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்கள் அஜித், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், பாண்டியநாடு, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசீந்தரன். ஆன்லைன் நடிப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் வரும் தொகை முழுவதையும் முதல்வரின் கொரொனா தடுப்புப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக இயக்குநர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார்.