1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : சனி, 5 ஜூன் 2021 (20:55 IST)

இன்று உலகச் சுற்றுச்சூழல் தினம்!!

உலகில் கடைசியாகப் பிறந்த மனிதன் அவனுக்கு முன் தோன்றிய சகக உயிரினங்கள் முதல் இயற்கைவாழிடங்கள் என அனைத்தும் வர்த்தக நோக்கிற்காக அழித்துவருவது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறிவதுபோல் ’’எங்கள் தலைமுறையினருக்கு எதிர்காலத்தில் என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள்’’ என்பது கேட்பது நியாயம் என்றே படுகிறது.

மனிதன் வெளியிடும் அவனது அத்தியாவசிய தேவைகளைத் தவிர கார்பண்டை ஆக்ஸைடு வாயு அதிகரித்து, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கச் செய்துவிட்டது. இதனால் உலகில் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது. சிவனே என்றிருக்கும் ராட்சதப் பனிக்கட்டிகளும் உருகிவருவதற்கு ஐநா சபை அடங்கிய குழு கவலைதெரித்துள்ளது.

தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தன் தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தால் அடுத்த தலைமுறை யினருக்கான சுற்றுச்சூழலில் நாமெதை மிச்சம் வைக்கப்போகிறோம்? என்ற கேள்வி நம் நெஞ்சைத் துளைப்பதாகவே உள்ளது.

வீட்டிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு வாகனம், அதிகளவு ஏசி, குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைக்கழிவுகள், சாயக்கழிவுகள், தோல்கழிவுகள், இயற்கை விவசாய நிலம் அழிக்கப்படுதல், வனங்கள் சுயநலத்துடன் வேட்டையாடப்படுதல் போன்ற பாவத்தால் ஏற்படும் தீமைக்குத் தக்கதாக  நாள்தோறும் நம்மைச் சுட்டுபொசுக்கும் சூரியனின் வெப்பத் தண்டனையிலேயே தெரியும். ஆனால், அதையும் தாண்டி ஓசோனையும் ஓட்டையாக்கி அந்தச் சூரியனையே உக்கிரமூட்டும் வண்ணம் மனிதர்கள் செயல்படுவதைப்போல் உலகில் வேறெந்த உயிரினமும் செயல்படுவதில்லை என்பதே உண்மை.

நானுட்பட நம் மனிதர்களுக்கு என்றாவது சுற்றுச்சூழலைக் கெடுத்துவருகிறோம் என்ற குற்றவுணர்ச்சி உண்டானால்…. நிச்சயம் மீதமிருக்கும் இயற்கையெல்லாம் புத்தர் பல்போல் இந்த உலகத்திலேயே பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன்.  

 சினோஜ்