1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:34 IST)

நான் பா ரஞ்சித்துக்கு எதிரானவன் அல்ல: ‘ருத்ர தாண்டவம்’ இயக்குனர்!

நான் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும் எனக்கும் அவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி உள்ளது என்றும் ருத்ரதாண்டவம் இயக்குனர் மோகன் இன்று நடந்த பிரஸ்மீட்டில் தெரிவித்துள்ளார்
 
மோகன் இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது இதில் பா ரஞ்சித்துக்கும் உங்களுக்கும் போட்டியா என்ற கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த மோகன்ஜி எனக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் போட்டி உண்டு ஆனால் அது ஆரோக்கியமான போட்டி என்றும் அதே நேரத்தில் நான் அவர்கள் எதிரானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே நாடக காதல் குறித்த திரைப்படமான திரவுபதி படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய மோகன், தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிரான படத்தை இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது