ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (16:17 IST)

இந்தோனேசிய மொழியில் முதல் முதலாக ரீமேக் செய்யப்படும் இந்தியப் படம்!

திருஷ்யம் படம் பல மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த பிரம்மாண்ட வெற்றியால் சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
 
இதையடுத்து திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலிஸாகி வெற்றி பெற்று, இப்போது அவையும் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருஷ்யம் படம் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தியப் படம் ஒன்று முதன் முதலாக அந்த நாட்டில் ரீமேக் செய்வது இதுவே முதல்முறையாம்.