1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (20:17 IST)

நானும் விஜய் ரசிகர் தான்....சூப்பர் ஸ்டார் டுவீட். .இணையதளத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.
sharuk

இந்நிலையில், ரா என்ற பெயரில் இந்தியில் வெளியாகும் விஜய்யின் பீஸ்ட் பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்கு நர் அட்லியைப் போல் நானும் நடிகர்  விஜய்யின் ரசிகர் தான் !பீஸட் படம் வெற்றியடைய வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் சுமார் 1 லட்சம்  லைக்குகள் பெற்று  வைரலாகி வருகிறது.