வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (13:10 IST)

இந்த கொம்பன் முத்தையாவுக்கெல்லாம் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது? வலைப்பேச்சு அந்தனன்

m muthaiya karthy
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் எம்.முத்தையா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சசிக்குமார் நடிப்பில் புலிக்குட்டி என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர், கார்த்தி நடிப்பில், கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது.  இந்த படம் சமீபத்தில்,   ஆனது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், அருண் விஜய் நடிப்பில் புதிய படத்தை முத்தையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுபற்றி,  சினிமா விமர்சகர்  வலைபேச்சு அந்தனன் தன் டுவிட்டர் பக்கத்தில், என் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் தருமிகளுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும். சந்தேகம் இதுதான்...

இந்த கொம்பன் முத்தையாவுக்கெல்லாம் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது?

அருண்விஜய்-முத்தையா கூட்டணியில் அடுத்த படம் ஸ்டார்ட்ஸ் – செய்தி என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பலரும், சினிமாவில் போட்ட பணம் வசூல்செய்தால், அதே இயக்குனரை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார்கள் என்று பதில் கூறி வருகிறார்கள்.