பெட்ரோல் பங்க் திறப்புவிழாக்களுக்கு எல்லாம் ஏன் நடிகைகளை அழைக்கிறார்கள்?... பிரபல நடிகை புலம்பல்!
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.
பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஹனிரோஸ் கேரளாவில் அதிகமாக கடைதிறப்பு விழாக்களுக்கு சென்று அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். இதுபற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள ஹனிரோஸ் “ நான் குறைவாகவே கடைதிறப்பு விழாக்களுக்கு செல்கிறேன். ஆனால் நிறைய அழைப்புகளைப் பெறுகிறேன். பெட்ரோல் கடை திறப்புக்கு எல்லாம் ஏன் நடிகைகளை அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.