ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (15:01 IST)

உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதில்லை: நடிகை கஸ்தூரி

உதயநிதி அவர்கள் தரக்குறைவாக பேசுவது என்பது புதிது இல்லை என நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார்.  அவர் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்பாக பேசுகிறார் என்று நினைத்தேன்.

உதயநிதி தரக்குறைவாக கருத்து கூறுவது புதிய விஷயம் இல்லை. ஏற்கனவே அவர் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை பற்றியும், சனாதனத்தை பற்றியும் விமர்சித்துள்ளார். ரஜினியை பற்றியும் கூறியிருக்கிறார். இது அவரது வழக்கமான நடைமுறையாயின், அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

மேலும் "2026 இல் திமுக கூட்டணி மைனஸ் ஆகிவிடும்" என விஜய் சொன்னது உண்மையாக மாறினால் அவரது வாயில் சர்க்கரை போடுவேன். இது மட்டுமின்றி, திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வருவாரா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால் திருமாவளவனும் ஆதவ் அர்ஜூனாவும் இனிமேல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒன்றாக தொடர்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என அவர் கருத்து தெரிவித்தார்.


Edited by Siva