1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (21:09 IST)

ஜி.வி பிரகாஷ்குமாரை ஃபாலோ செய்யும் ஹாலிவுட் பிரபலம் !

இசையமைப்பாளர், நடிகர் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்தும், மூன்று படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார் ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ’கோல்ட் நைட்ஸ்’என்பது குறிப்பிடத்தக்கது

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் இந்த ஆல்பம் உருவானது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்த ஜிவி பிரகாஷ், தனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகிவிட்டதாகவும், இதன் பர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்திருந்ததார்.

அதேபோல் ஜிவியின் முதல் ஆங்கில ஆல்பத்தின் பாடலான #HighandDry  செப்.,17 அன்று இணையதளத்தில் வெளியானது.  இளைஞர்களைக் கவரும் விதத்தில் உள்ள இத இசைப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஹாலிவுட் பிரபலம் ஜஸ்டின் பைபருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துள்ளதால் அவர் ஜி.வி.பிரகாஷ் குமாரை டுவிட்டரில் பிந்தொடர்கிறார்.