செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:35 IST)

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா மரணம்...

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் வெள்ள சுப்பையா இன்று காலை மரணமடைந்தார்.

 
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உட்பட 200 திரைப்படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர் நடிகர் சுப்பையா. ஏற்கனவே கருப்பாக ஒரு சுப்பையா இருந்ததால், அவர் கருப்பு சுப்பையா எனவும், இவரை வெள்ளை சுப்பையா எனவும் திரைத்துறையில் அழைக்கப்பட்டார்.
 
இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடித்து வந்தவர் ஆவார். அதோடு, கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 
சமீப காலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கழுத்தில் ஒரு கட்டி வந்ததாகவும், அது புற்றுநோய் கட்டியாக மாறியதால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மரணமடைந்தார்.