இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
Last Modified வியாழன், 12 மார்ச் 2020 (19:00 IST)
பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று தர்மசாலாவில் நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் மார்ச் 15ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் மார்ச் 18ம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக அதிரடி அறிவிப்பு ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பால் இந்த போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :