திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (17:14 IST)

வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது சென்செக்ஸ்!

வரலாறு காணாத வகையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 
 
இந்தியப் பங்குச்சந்தை இன்றைய நாளின் துவக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன. அந்த வகையில் சென்செக்ஸ் 3,204 புள்ளிகள் சரிந்தது. 2008 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரேநாளில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சி இதுவாகும். 
 
வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது.  நிப்டி 825 புள்ளிகள் சரிந்து 9,633 ஆக இருந்தது. கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது பல இழப்பை ஏற்படுத்தியுள்ளது.