வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2023 (19:52 IST)

மன அறையை பொய் கொண்டு நிறைக்காதவர்- சூப்பர் ஸ்டாருக்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து

harbajan sigh
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில்  ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமாத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்  அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ரஜினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

அதில்,  அன்பு தலைவா! நீங்கள் முகநரையை மை கொண்டு மறைக்காதவர்.,அதே போல் உங்கள் மன அறையை பொய் கொண்டு நிறைக்காதவவர். செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல! மாசற்ற மாணிக்கம்! பிளாக்பஸ்டர் பிறந்தநாள் வாழ்த்துகள்.அலப்பறை கிளப்புங்க சார்’’

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

‘’தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன் எக்ஸ் தள பக்கத்தில்,

‘’அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவரையும் சமமாக மதித்து, எல்லோரையும் நேசிக்கும் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ஈடு இணையில்லா பண்பிற்கும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்ச நிலையினை அடைந்திருந்தாலும், எளிமையான அணுகுமுறையினால், அனைவரிடத்திலும் நட்பு பாராட்டும் அவரது உயர்ந்த பண்பினை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.

அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’என்று தெரிவித்துள்ளது.