வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:54 IST)

ஹிப் ஹாப் தமிழாவின் 7வது படம்: டைட்டில் & பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

hip hop
தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதுவரை ஆறு படங்கள் நடித்துள்ள நிலையில் ஏழாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
 
ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படத்திற்கு ’பிடி சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிப்பதுடன் இந்த படத்துக்கு இசையும் அமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

pt sir
Edited by Mahendran