செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (18:59 IST)

உத்தரபிரதேசம்: கடும் குளிரில் இருதய நோயாளிகள் 25 பேர் மரணம்

உத்தபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இம்மாநிலம் திகழ்கிறது.

இந்த நிலையில், ஆண்டு தோறும், வருடன் கடைசியான டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் நிலவும்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், இந்தக் குளிரால் 25 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும்,  நேற்றைய தினம், அம்மா நிலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில், 7 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
சமீபத்தில் டெல்லியில், பள்ளிக் குழந்தைகள் அதிகாலமே எழுந்து கிளம்ப வேண்டும் என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.