1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (10:41 IST)

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் ஓடிடியில்!

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் அன்பறிவு.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவர் தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படம் சமீபத்தில் ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த படத்துக்கு முன்பே அவர் நடித்திருந்த ‘அன்பறிவு’ என்ற திரைப்படம் இப்போது ஓடிடி ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. நெப்போலியன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படத்தை இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் நேரடி ஓடிடி வெளியீடாக இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.