1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (09:07 IST)

ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. கடைசியாக ரிலீஸான அவரின் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

காமெடி பேண்டசி திரைப்படமான இந்த திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி முதல் வீரன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.