1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (12:58 IST)

தியேட்டரில் காத்து வாங்கிய ஹே சினாமிகா… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மானின் ஹே சினாமிகா திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா’ படத்தினை நடன இயக்குனர் பிருந்தா இயக்கி இருந்தார். முக்கோணக் காதல் கதையாக உருவாகி வந்த இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.இந்நிலையில் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. தேய்வழக்கான கதையாகவும், காட்சிகளில் சுவாரஸ்யமே இல்லாமலும் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.  

இதையடுத்து இப்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ஜியோ சினிமாஸின் ஓடிடி தளமான ஜியோ சினிமாஸில் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.