அரைகுறை ஆடை அணிவது அவருக்கு பிடிக்காது- பிரபல நடிகை
அரைகுறை ஆடைகள் அணிவது என் காதலனுக்குப் பிடிக்காது என பிரபல நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை ராக்கி சாவந்த். இவர் தனது காதல் கணவரை ரித்தேஷை பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
அதன்பின்னர், ஆதில்கான் துரானி என்பவரைஒ தற்போது காதலித்து வருவதாக கூறினார்.
இந்த நிலையில் தன் காதலர் குறித்து துரானி கூறியுள்ளதாவது: என் காதலரான ஆதிலின் குடும்பத்திற்கு நான் கவர்ச்சி உடை அணிவதை ஏற்கவில்லை. அதனால், அரைகுறை ஆடைகளை நான் அணிவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் காதலர் ஆதில் தனக்கு பி.எம்.டபள்யூ காரையும், துபாயில் அவர் பெயரில் வீடு வாங்கியுள்ளதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.