திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2018 (15:04 IST)

ஹாரி பாட்டருக்கும், த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

ஹாரி பாட்டருக்கும், த்ரிஷாவுக்கும் இடையில் ஒரு விஷயம் ஒற்றுமையாக நடந்துள்ளது.

 
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் ‘மோகினி’. பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், த்ரில்லர் படமாகும். படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போதே, பயங்கரமான திகில் படம் இது என்ற உணர்வு ஏற்படுகிறது.
 
ஹாரர் படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் அவசியம். அந்தக் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக, ஹாரி பாட்டர் படத்துக்கு கிராபிக்ஸ் செய்த டீமை, இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் செய்ய வைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
 
இந்நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நாளை ரிலீஸாக இருக்கின்றன.