செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (21:36 IST)

த்ரிஷா சாமி ஸ்கொயரில் நடிப்பதை உறுதி செய்த இயக்குநர்

ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக  இது தயாராகி வருகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து என்பதால், இந்த படத்தின் 2 பாகம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் அப்பா, மகன் என விக்ரம் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக திருநெல்வேலியில்  நடைபெற்று வருகிறது.
 
‘சாமி’யில் விக்ரமுக்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்த த்ரிஷா, படக்குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக த்ரிஷா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் இயக்குநர் ஹரி பேசுகையில் “இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக  த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என 2 நாயகிகள் நடித்து வருகிறார்கள்” என்று கூறி த்ரிஷா நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், படத்தில் 5 பாடல்கள், 4 சண்டைக் காட்சிகள், 2 சேஸிங் காட்சிகள் இருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார். படத்தை வருகிற ஜூன்  14-ஆம் தேதி ராம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.