செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (11:04 IST)

லண்டனில் கார் ஓட்டி சாகசம் செய்த த்ரிஷா

‘மோகினி’ படத்துக்காக த்ரிஷா கார் ஓட்டியபடி ஸ்டண்ட் செய்யும் காட்சி லண்டனில் படமாக்கப்பட்டது.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் ‘மோகினி’. த்ரில்லர் படமான இதன் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் - மெர்வின்  இசையமைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர், ஒரு மில்லியன் பார்வையாளர்களைக்  கடந்துள்ளது.
 
இந்தப் படத்துக்காக, லண்டனில் கார் ஓட்டியபடியே த்ரிஷா ஸ்டண்ட் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. லண்டன் போலீஸாரிடம் முறைப்படி அனுமதி வாங்கி, அவர்கள் உதவியோடு இந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்டது. த்ரிஷா இண்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்ததால், அனுமதி வாங்குவது எளிதாக இருந்தது. இந்த ஸ்டண்ட்  காட்சியில், டூப் கூட போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் த்ரிஷா.