1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:41 IST)

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது: கே.வி.ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து டுவிட்!

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி காலையிலேயே திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேவி ஆனந்துடன் பல படங்களில் பணியாற்றிய கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
வருந்துகிறேன் நண்பா!
 
திரையில் 
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
 
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
 
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
 
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
 
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
 
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.