இயக்குனர் சசி இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம்!

Last Modified வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:32 IST)

இயக்குனர் சசி இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஆகியோர் போட்டியாளராக களமிறங்கினார். அதில் பிரபலமான ஹரிஷ் மற்றும் ரைசா ஜோடி சேர்ந்து நடித்த ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படம் வெற்றியைப் பெற்றதை அடுத்து ஹரிஷ் கல்யாண் மேல் கவனம் விழுந்தது.

அதையடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சசி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :