1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 11 டிசம்பர் 2019 (18:36 IST)

'பெல்லி சூப்லு' ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண் - ஜோடி இந்த அழகிய நடிகையா..?

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். ’பொறியாளன்’, ’வில் அம்பு’ என அடுத்தடுத்து தமிழில் சில படங்கள் நடித்து புகழ்பெற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வெளியில் வந்து சக பிக்பாஸ் போட்டியாளரான ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமானார். 
 
அடுத்ததாக தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண்.
 
விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்லு' தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர்.  ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.  ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். 
முழுக்க முழுக்க உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் இப்படம் இயற்கை சாராம்சம் மிக்க படமாக இருக்கும்.  விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தயாரி்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார் கோடலி முரளி கிருஷ்ணா. இந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.