1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (19:05 IST)

ஹரிஷ் கல்யாணுடன் நெருக்கமாக இருக்கும் பிரியா பவானிசங்கர்: காதலா?

ஹரிஷ் கல்யாணுடன் நெருக்கமாக இருக்கும் பிரியா பவானிசங்கர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானிசங்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
இந்த புகைப்படத்தை ஹரிஷ் கல்யான் தனது டுவிட்டரில் பதிவு செய்து அமெரிக்காவில் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்டுகளை பதிவு செய்வார்கள் என்று எண்ணி கமெண்ட் பகுதியை தடை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஹரிஷ் கல்யாணின் இந்த டுவிட்டுக்கு ‘லாக்டவுன் வரை பொறுக்க முடியாதா? என்று பிரியா பவானிசங்கர் பதிலளித்து அவரும் கமெண்ட்டை தடை செய்துள்ளார். ஏற்கனவே பிரியா பவானி சங்கர் ஒருவரை காதலித்து வருவதாக கூறி வந்த நிலையில் தற்போது ஹரிஷூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது