வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:30 IST)

ஒரு கோடி நஷ்ட ஈடு... ரைசா வக்கில் நோட்டீஸ்!

தோல் மருத்துவர் பைரவி செந்தில் ஒரு கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 
தோல் மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா வில்சன் குற்றம்சாட்டிய விவகாரத்தில், ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்திலுக்கு ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  
 
1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவு பெறாமல் ரத்தக்கசிவு , வீக்கம் ஏற்பட்டது என நடிகை ரைசா கூறியுள்ள நிலையில், நஷ்ட ஈட்டை 15 நாளில் தராவிடில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சனின் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.