வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:14 IST)

ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பிக்பாஸ் ரைசா வில்சன்: ஏன் தெரியுமா?

பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் சமீபத்தில் ஃபேஸியல் செய்து கொண்டதால் முகம் வீங்கி கொண்டதை அடுத்து தனக்கு ஃபேசியல் செய்த மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவு செய்து இருந்த நிலையில் அதில் அவரது முகம் வீங்கி இருந்தது. தான் ஃபேசியல் செய்ய மருத்துவர் பைரவியிடம் சென்றதாகவும் அங்கு அவர் ஃபேஸியல் மட்டுமின்றி வேறு சிலவற்றையும் செய்ததாகவும் அதனால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
 
இதற்கு விளக்கம் அளித்த மருத்துவர்கள் இந்த சிகிச்சை செய்து கொண்டால் ஓரிரு நாள் முகம் வீங்க தான் செய்யும் என்றும் அதன் பிறகு சரியாகிவிடும் என்றும் இது ரைசாவுக்கும் நன்றாக தெரியும் என்றும் ஏற்கனவே இந்த சிகிச்சையை அவர் எடுத்துள்ளார் என்றும் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் தனது முக பாதிப்புக்கு மருத்துவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடு தொகையை  வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்