1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:44 IST)

’அருவா’ என்றைக்கு இருந்தாலும் சூர்யாவுக்குத்தான்: ஹரி தரப்பு தகவல்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனதாகவும், அந்தப் படம் டிராப் ஆகவில்லை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் இருவேறு செய்திகள் கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’அருவா’ படத்தின் கதையில் சூர்யாவுக்கு பதில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் இதனை ஹரி தரப்பினர் இதனை மறுத்துள்ளனர். ’அருவா’ கதை சூர்யாவுக்காக எழுதப்பட்டது என்பதால் அந்த கதை என்றைக்கு இருந்தாலும் சூர்யாவுக்கு தான் என்றும் வேறு நடிகர் அந்த கதையில் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்
 
மேலும் விக்ரமுடன் ஹரி இயக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான் என்றும் ஆனால் அது ’அருவா’ கதை கிடையாது என்றும் வேறு ஒரு கதை என்றும் ஹரி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்
 
இதை அடுத்து இப்போது இல்லாவிட்டாலும் ஒரு சில ஆண்டுகள் கழித்து ’அருவா’ திரைப்படத்திற்காக மீண்டும் சூர்யா மற்றும் ஹரி இணைய உள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது