பாகுபலி வசூலை முந்தியதா சூரரைப் போற்று திரைப்படம்!

Last Modified புதன், 2 டிசம்பர் 2020 (10:39 IST)

சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸான சூரரைப் போற்று திரைப்படம் பாகுபலி படத்தை விட அதிகம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இதுவரை மட்டும் 1.1 கோடி பேர் அனைத்து மொழிகளிலும் சேர்ந்து பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் பாகுபலி படத்தின் தியேட்டர் வசூலை சூரரைப் போற்று முந்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :