1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:09 IST)

12 ஆண்டுக்கு பின் மசாலா இயக்குனருடன் இணைந்த ஜி வி பிரகாஷ்!

இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

இசையமைப்பாளராக தீவிரமாக இயங்கி வந்த ஜி வி பிரகாஷ் நடிப்பு ஆசை வந்து நடிக்க சென்றதால் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் நடிப்பிலும் அவரால் பிரகாசிக்க முடியாததால் மீண்டும் இசைப்பணிக்கு திரும்பினார். அவர் இசையமைத்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் ஹரி அருண் விஜய்யை வைத்து உருவாக்கும் படத்துக்கு அவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ஹரி இயக்கிய சேவல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.