வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:43 IST)

அதனாலதான் நீங்க சின்னத்தல: ஹர்பஜன்சிங் சொன்ன நன்றி!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ’பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படம் நாளை ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சின்ன தல என்று கூறப்படும் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : 
 
பஜ்ஜி பா @harbhajan_singh என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு படம் கண்டிப்பா பீஸ்டா ருக்கப்போகுது.#FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மக்களே நீங்க எல்லாரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க 
 
இந்த நிலையில் சின்ன தல சுரேஷ் அவர்களுக்கு தனது நன்றியை ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நன்றி ரெய்னா தம்பி!! உங்களோட வாழ்த்துகள் ரொம்ப பிரமாதம்.மொத்த #FriendShipMovie டீமும் பயங்கர ஹாப்பி ! மனசார வாழ்த்து சொல்லுற அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல.மறக்காம நீங்களும் நம்ம சிஸ்கே பிள்ளைகள் எல்லாரும் #FriendShip படம் பாருங்க..
 
ஹர்பஜன்சிங் உடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.