வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (11:42 IST)

ஆப்பரேஷன் பண்ணி எடையக் குறைச்சிட்டு யோகான்னு சொல்வாங்க… ரசிகரின் கமெண்ட்டுக்கு ஹன்சிகா பதில்!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய்யுடன் இணைந்து வேலாயுதம், எங்கேயும் காதல், சிம்புவுடன் இணைந்து வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது 50 வது படமான  மஹா என்ற படம் வெளியானது. இந்த நிலையில், தன் நீண்ட  நாள் காதலரான சோஹைல் கதுரியாவுடன் திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்போது சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் வலம் வருவதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறியுள்ளார். சமீபத்தில் யோகா தினத்தை முன்னிட்டு அவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட அதில் ஒருநபர் “இந்த நடிகைகள் எல்லாம் ஆப்பரேஷன் மூலம் உடல் எடையை குறைத்துவிட்டு யோகா செய்து குறைத்தேன் என சொல்வார்கள்” எனக்  கமெண்ட் செய்திருந்தார்.

அவருக்கு பதிலளித்த ஹன்சிகா “உடல் எடை குறைப்புக்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அதில் யோகாவுக்கும் முக்கியப் பங்குண்டு. யோகா நேர்மறை எண்ணத்தைப் பரப்புவதையும் கற்றுக்கொடுக்கும். வெறுப்பை அல்ல.” எனக் கூறியுள்ளார்.