செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (15:23 IST)

பிக்பாஸ் வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்ட ஹன்சிகா…. பின்னணி என்ன?

ஹன்சிகா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கும் புதிய தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகா நடிக்கும் மை 3 என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார்.

வழக்கமாக காமெடி படங்களையே தனது கதைக்களமாக எடுத்துக்கொள்ளும் எம் ராஜேஷ், இந்த முறை முதல் முறையாக ஹாரர் களத்தில் புகுந்துள்ளாராம். இந்த தொடரின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் தற்போது இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் இல்லத்தில் வெளியாகியுள்ளது. இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.