புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:48 IST)

மீண்டும் இணைந்த வெற்றிமாறன் – அமீர்… புது வெப் சீரிஸ் விரைவில் ரிலீஸ்!

அமீர் நடிப்பில் வெற்றிமாறன் எழுதியுள்ள நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தில் ராஜன் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். தனுஷ் கதாபாத்திரத்துக்கு நிகரான பாராட்டுகளை அந்த கதாபாத்திரம் பெற்றது. இதையடுத்து இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

வெற்றிமாறன் எழுதியுள்ள நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் தொடரை ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்த தொடர் விரைவில் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது.