செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (17:51 IST)

யார் இந்த ஹன்சிகா மோட்வானி..? வாழ்க்கை குறும்படம் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. இதையடுத்து புதிய youtube  சேனல் ஒன்றை துவங்கி தனது திறமைகளை வெளிப்படுத்து ஹன்சிகா தற்போது யார் இந்த ஹன்சிகா மோட்வானி..? என குறிப்பிட்டு What keeps me going: A short memoir என்ற தனது வாழ்க்கை பயணத்தை குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஸ்டார், நடிகை என்பதையெல்லாம் தாண்டி நான் ஒரு human being. கவலையற்ற ஒருவர். கேமரா முன்பு நிற்பது அவ்வளவு பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு பில்லர் சப்போர்ட்டாக இருக்கும் எனது ரசிகர்களை ரொம்ப பிடிக்கும். இது my way அல்லது high way. நான் ஒரு உண்மையான குறிக்கோள் மற்றும் கொஞ்சம் crazy கலவை என ஹன்சிகா தனது சொந்த குரலில் பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.