கொளுத்தும் வெயிலில் குளு குளுன்னு ட்ரீட் கொடுத்த ஹன்சிகா... !

Papiksha Joseph| Last Updated: சனி, 23 மே 2020 (14:54 IST)

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது.

பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் பீர் கிளாஸுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதந்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கட்டிழுத்துள்ளார். ஏற்கனவே சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சூடான இவரது போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


Every sunset brings the promise of a new dawn! Looking forward to a brighter tomorrowஇதில் மேலும் படிக்கவும் :