1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (12:32 IST)

‘நோ ரெஸ்ட்…’ – ஹன்சிகா அதிரடி

கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல், தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.


 
 
வெள்ளைத்தோலால் சில காலம் கோடம்பாக்கத்தை மயக்கி வைத்திருந்த ஹன்சிகாவுக்கு, இப்போது மார்க்கெட் டல். தமிழில் பிரபுதேவா ஜோடியாக ‘குலேபகாவலி’, மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் என கைவசம் 3 படங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால், இயக்குனர்கள் என்ன சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார். மலையாளத்தில் ‘வில்லன்’ படத்தில் நடித்தபோது, கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் படமாக்கியிருக்கிறார்கள்.

அப்போது ஹன்சிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆனால், அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால், 10 கிலோமீட்டருக்கு மேல் போக வேண்டும். இருந்தாலும், பொறுத்துக்கொண்டு நடித்தார் ஹன்சிகா. பிறகு, கோபிசந்த் நடிக்கும் தெலுங்குப் படத்திற்காக ஹைதராபாத் சென்றவர், அங்கு நடித்து முடித்துவிட்டு, ‘குலேபகாவலி’ படத்தில் நடிப்பதற்காக சென்னை திரும்பியிருக்கிறார். இனிமேல் படம் கிடைக்காது என்ற வெருப்பில், இருக்கிற வாய்ப்புகளை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்கிறாராம் நடிகை.