திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (15:10 IST)

அஜித் பட இயக்குனருக்கு கொக்கி போடும் சத்யம் சினிமாஸ் முன்னாள் உரிமையாளர்!

சத்யம் சினிமாஸின் முன்னாள் உரிமையாளர் ஸ்வரூப் ரெட்டி ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சத்யம் சினிமாஸ் சமீபத்தில் பிவிஆர் நிறுவனத்துக்கு கைமாற்றியது. இதன் மூலம் சத்யம் சினிமாஸ் 900 கோடி ரூபாய் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாம். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் ரெட்டி இயக்குனர் ஹெச் வினோத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.