கமலிடம் டவுட் கேட்ட பிரேமம் இயக்குனர்… அவர் அளித்த பதில்!
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கமலிடம் மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதுகுறித்து சில பதிவுகளைப் பகிர்ந்திருந்தார் கமல்ஹாசன். அவரின் சமூகவலைதளப் பதிவில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குனர்களுக்கு தசாவதாரம் ஒரு பிஹெச்டி என்றால் மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போன்றது… அந்த படத்தின் காட்சிகளை எப்படி படமாக்கினீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டிருந்தார்.
அவருக்கு பதிலளித்த கமல்ஹாசன் விரைவில் சொல்கிறேன். ஆனால் அதில் உங்களால் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத்தரும் எனக் கூறியுள்ளார்.