புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (10:05 IST)

வலிமை வில்லன் கதாபாத்திரத்துக்கு அஜித் பரிந்துரைத்த நடிகர்கள்… ஆனால் நடந்தது வேறு!

வலிமை படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் கார்த்திகேயாவுக்கு பதில் வேறு சில நடிகர்களை பரிந்துரை செய்தார் என்று ஹெச் வினோத் கூறியுள்ளார்.

வலிமை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் பொங்கல் பண்டிகையின் போது வெளியாக உள்ளது. இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். முதலில் இயக்குனர் ஹெச் வினோத் இந்த கதாபாத்திரத்துக்காக அஜித்திடம் பேசியபோது அஜித் பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் ஆகியோரை நடிக்கவைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஹெச் வினோத் கார்த்திகேயா சிறப்பாக இருப்பார் என்று கூறியதும் அஜித் சம்மதித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கார்த்திகேயா சில காட்சிகளில் நடித்த பின் பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸை வைத்து மீண்டும் எடுக்கலாமா என வினோத் கேட்டப்போது அதற்கு அஜித் மறுத்துவிட்டாராம். ஏனென்றால் ‘நானும் இதுபோல ஒரு படத்தில் 2 நாட்கள் நடித்து பின்னர் நீக்கப்பட்டு இருக்கேன். அப்படி நீக்கப்பட்டால் பல வதந்திகள் கிளம்பும். அதனால் நான் ஒன்றரை வருடங்கள் அவதிப்பட்டேன்’ என்று கூறினாராம்.