முதல் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்த ஹெச் வினோத்!
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்ஷன்ஸ் என்ற கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு விஜய் அரசியலில் முழுக் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் 69 படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் 10 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த ஹெச் வினோத் திட்டமிட்டதை விட முன்பாக 9 நாட்களிலேயே முடித்துவிட்டாராம். ஒரு பாடல் காட்சியும் சில காட்சிகளும் அவர் இந்த ஷெட்யூலில் படமாக்கியுள்ளார்.