புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (10:21 IST)

தவெக புதுவை நிர்வாகி திடீர் மரணம்: விஜய் இரங்கல்..!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் , திடீர் உடல்நலக் குறைவால் காலமான நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  
 
தவெக புதுவை மாநில செயலர் சரவணன் புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும்  ஒரு மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும்போதே   விஜய்யின் தீவிர ரசிகராக இருந்த சரவணன் ரசிகர் மன்றத்திலும் உள்ளார்.
 
தற்போது நடிகர் விஜய் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளராக இருப்பதோடு, அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 
வரும் 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிரமாக இருந்த நிலையில் தான் சரவணன் எதிர்பாராத வகையில் காலமானார்.

Edited by Mahendran