1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (16:23 IST)

யூடியூப்பில் சாதனை படைத்த ''சில்லா சில்லா'' பாடல்

ThunivuFirst Single
நடிகர் அஜித்குமாரின் துணிவு பட பாடல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்குப் பின் ஹெச்.வினோத். போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் துணிவு.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் மோத உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள்  வேகமாக நடந்து வருகிறது.
சமீபத்தில், ஜிப்ரான் இசையில், வைசாக் வரிகளில் அனிருத் பாடிய துணிவு பட முதல் சிங்கில் சில்லா சில்லா என்ற பாடல் இணையதளத்தில் வைரலானது.

இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில்லா சில்லா என்ற பாடல்  யூடியூப்பில் குளோபல் டாப் மியூசிக் வீடியோக்களில்  நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளதாக போனிகபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 இதனால் அஜித் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

Edited By Sinoj