திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (20:31 IST)

ஜி.வி பிரகாஷ் இசையில்...’சூரரைப் போற்று ’படத்தில் பாடிய நடிகர் சூர்யா !

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.இவர் தற்போது  சுதா கொங்கரா இயக்கிவரும்  ’சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை 2 எடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
 
இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். குறிப்பாக சூர்யாவுக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.
 
இந்நிலையில், இப்படத்தில் வரும் ஒரு ராப் பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாக ஜிவி பிரகஷ்குமார் தெரிவித்துள்ளார்.