இளையராஜா இசையில் உருவாகும் மற்றொரு பொன்னியின் செல்வன்! போஸ்டர் வெளியீடு!

Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (10:17 IST)

இளையராஜா இசையமைக்கும் பொன்னியின் செல்வன் வெப் தொடரின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். அதே நேரத்தில் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸாகவும் எடுக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

இப்போது ஒரே நேரத்தில் வெப் சீரிஸாகவும், படமாகவும் பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது. படத்தை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். அதே போல வெப் சீரிஸை அஜய் பிரதீப் என்பவர் திரைக்கதை எழுதி இயக்க உள்ளார். இந்த வெப் சீரிஸுக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். அதன் முதல்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட அறிவிப்புகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :