1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (18:46 IST)

ஜிவி பிரகாஷின் ‘ஐங்கரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷின்நடிப்பில் உருவான ஐங்கரன் என்ற திரைப்படம் பல மாதங்கள் திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
 
ஜீவி பிரகாஷ் நடித்த்க ‘ஐங்கரன்’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகிய ‘ஐங்கரன்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் மற்றும் காளி வெங்கட் ,ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த செல்பி திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ஒரே மாதத்தில் இரண்டு ஜீவி பிரகாஷ் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது